திருவரங்கன்
பல்லவி
அன்புடன் என்னை ஆதரிக்க வேண்டுமென
திருவரங்கநாதனை மனமாரப் பணிந்தேன்
அனுபல்லவி
கன்மவினைகளால் படுந்துயர் நீங்கி
இன்பமும் நல்வாழ்வும் நிம்மதியும் பெறவே
சரணம்
தென்னிலங்கை ராவணனை வென்று பகைமுடித்து
தன்னைச்சரண்டைந்த இளவலுக்கு முடிசூடி
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை ஆட்கொண்ட
அரங்கமாநகருளானைக் கேசவனைத்துதித்தேன்
No comments:
Post a Comment