சந்திரசூடன்
பல்லவி
சந்திரனைச்சூடிய சாம்பசதாசிவனை
வந்தனை புரிந்து சந்ததம் துதித்தேன்
அனுபல்லவி
நந்தியும் கணங்களும் இந்த்ராதி தேவரும்
பிரமனும் முனிவரும் அனைவரும் போற்றும்
சரணம்
கந்தன் கணபதி வணங்கிடும் தந்தையை
வெந்தழலேந்திடும் நெற்றிக்கண்ணனை
அந்தமுமாதியும் இல்லாத ஈசனை
உந்திகமலன் கேசவன் நேசனை
No comments:
Post a Comment