தாள் பணிந்தேன் தயாநிதே
பல்லவி
தாள் பணிந்தேன் தயாநிதே
நாள்தொறும் உளமார உருகித்துதித்து
அனுபல்லவி
மாள்வதும் பிறப்பதும் இல்லாத நிலையளித்து
தோள்கொடுத்தெனையே காத்தருள்வாயே
சரணம்
வேள்விகள் செய்திடும் வேதியரும் முனிவரும்
கோள்களும் தேவரும் பிரமனும் வணங்கிடும்
தாமரைப்பாதனே ்பாற்கடல்வாசனே
ஆள்வதுன் தர்மம் ஆதிகேசவா
No comments:
Post a Comment