மீனாக்ஷி
பல்லவி
சாமகானம்தனை மிகவும் ரசித்திடும்
மீனாக்ஷி உந்தன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
சோமசுந்தரர் மனங்கவர் அன்னையே
பாமரனெனையே காத்தருள்வாயே
சரணம்
நாமகளும் பூமகளும் நரர்சுரரும் போற்றும்
அங்கயற்கண்ணி அன்னபூரணி
ஶ்ரீநகரம்தனில் விளங்கும் ராஜராஜேச்வரி
மாமதுரை அரசாளும் கேசவன் சோதரி
No comments:
Post a Comment