Ayurdehi dhanam dehi
vidyam dehi maheswari
samasthamakhilam dehi
dehi me Parameshwari
ஏகாம்ரேச்வரி
பல்லவி
ஆயுள் ஆரோக்கியமும் கல்வியும் செல்வமும்
தாயுள்ளத்துடனே தந்தருள்வாய் ஈச்வரி
அனுபல்லவி
தேயும் பிறைநிலவை நெற்றியில் சூடிய
மாயே மரகதமே கேசவன் சோதரி
சரணம்
தூயவளே துதித்திடும் அடியவர்க்கெல்லாம்
நீயாக க்கருணையளித்திடும் காமாஷி
தேயாத புகழ் மேவும் காஞ்சிமாநகர் வளர்
தாயே தயாகரி ஏகாம்ரேச்வரி
நீயாக க்கருணையளித்திடும் காமாஷி
தேயாத புகழ் மேவும் காஞ்சிமாநகர் வளர்
தாயே தயாகரி ஏகாம்ரேச்வரி
No comments:
Post a Comment