தாடாளன்
பல்லவி
தாடாளன் திருவடியை உளமாரப்பணிந்தேன்
வாடாமலர் தூவிப் பாமாலை சாற்றி
துரிதம்
சேடனும் பிரமனும் கருடனுமிந்த்ரனும்
நாரதர் சுகசனகாதியர் துதித்திடும்
அனுபல்லவி
கோடானுகோடி நரர்சுரரும் முனிவர்களும்
நாடித்துதித்திடும் ஶ்ரீ வாசுதேவன்
சரணம்
ஈடுபாடுடனே அவன் நாமம் துதிப்போர்க்கு
தேடாமலே வந்து தயவளிக்கும் தயாபரன்
பாடாய்ப்படுத்தும் பழவினைப் பயன்களை
கேடாகச் செய்திடும் கேசவன் ஶ்ரீக்ருஷ்ணன்
No comments:
Post a Comment