தேவாதி தேவா
பல்லவி
தேவாதி தேவா ஶ்ரீ பத்மநாபா
மூவாசைப்பிணியகல உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
மாவாய் பிளந்து மூவுலகும் காட்டிய
ஶ்ரீவாசுதேவா அச்சுதா கேசவா
சரணம்
பரம புருஷனே புருஷோத்தமா
பரம்பொருளே ஶ்ரீ பரந்தாமா
பரம்பதம்தனில் நிலைத்திருக்கும்
பரமாத்மா ஶ்ரீமன் நாராயணா
No comments:
Post a Comment