கமலநாபன்
பல்லவி
கமலசரண்யனே கமலநாபனே
கழலடி பணிந்தேன் துணைபுரிவாயே
அனுபல்லவி
கமலாசனனும் அமரேந்தினும்
உமாபதியும் அமரரும் வணங்கிடும்
சரணம்
நிரந்தரமில்லா உலகில் நிரந்தரம்
பரந்தாமனே நீ ஒருவன் மட்டுமே
பரம்பொருளே கேசவா உனதருள் வேண்டியே
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி உன்னை துதித்தேன்
No comments:
Post a Comment