இஷ்டசித்தி கணபதி
பல்லவி
இடர்கள் களைந்திடும் இஷ்டசித்தி கணபதியே
அப்பமோடவல்பொரி அளித்துனைப் பணிந்தேன்
அனுபல்லவி
தொடர்ந்திடும் பவப்பிணி பழவினைப்பயன்கள்
தொலைந்திட வேண்டுமென அடியவன் கேசவன்
சரணம்
குடம் குடமாய்ப் பால் அபிஷேகம் செய்தாலும்
நடையாய் நடந்துனை வலம் வந்தாலும்
அடுத்தவரைக்கெடுத்து தீச்செயல் புரிந்திடும்
அடங்கா மனிதருக்கு உந்தன் துணை ஏது
No comments:
Post a Comment