கரம் கூப்பி ……
பல்லவி
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி உனைப் பணிந்து நின்றேன்
பரம்பொருளே கேசவா எனக்கருளத் தருணமிதே
அனுபல்லவி
அரனயனமரர் அமரேந்திரன் பணியும்
முரளிதரனே முழுமுதற்கடவுளே
சரணம்
பரந்தாமனே கண்ணா மாதவா மதுசூதனா
நரஜென்மம் தந்தெனையே உலகிலலையவைத்தாய்
புரந்தர விட்டலனே அலைந்தது போதுமென
நிரந்தரமாய் ஓய்வளிக்க வேண்டுமென வேண்டியே
No comments:
Post a Comment