பலமுறை உனைப்பாடி……
பல்லவி
பல முறை உனைப்பாடி சலிக்கவில்லை ஶ்ரீராமா
பலம் தந்து ஊக்குவிக்கும் கருவியும் நீதானே
அனுபல்லவி
அலகிலா விளையாடல் பல புரியும் கேசவனே
உலகில் உனையன்றி வேறு தெய்வமனக்கில்லை
சரணம்
அலைமகளை மார்பணியாய் வைத்திருக்கும் மாதவனே
மலைமேலமர்ந்திருக்கும் கோவிந்தனும் நீயே
அலைமேல் துயிலும் நாராயணனும் நீயே
சிலை வடிவாய் அயோத்தியில் நிற்பவனும் நீயே
No comments:
Post a Comment