உனையன்றி எனைக்காக்க…..
பல்லவி
உனையன்றி எனைக்காக்க வேறு யாருளார்
அனைத்தும் நீயே சீதையின் நாயகனே
அனுபல்லவி
வினைப்பயனால் கட்டுண்டு தறிகெட்டலைந்தேன்
உனையும் நினையாமல் சுற்றித் திரிந்தேன்
சரணம்
உனை வேண்டி ஆதி மூலமே என்றழைத்த
ஆனைக்கருள் செய்தது போலவே
சுனை நீராய்ச்சுரக்குமுன் கருணை ஊற்றினையே
தினையளவு எனக்களித்து ஆண்டருள்வாய் கேசவனே
No comments:
Post a Comment