Tuesday, 29 August 2023

சர்வம்

 படித்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!

சர்வம் 

பல்லவி

சர்வம் கண்ணனென்றறிந்த பின்னே

கர்வம் உனக்கெதற்கு மனமே புலம்பாதே

       அனுபல்லவி

தர்மம் தழைத்திடவே அவதாரமெடுத்த

வர்ம மில்லாத கேசவனுமவனே

      சரணம்

நடந்ததெல்லாமே நல்லவண்ணம் நடந்தது

நடப்பதும் நடக்கப்போவதும் நல்லதே

உனதென்றும் உனதல்ல இழப்பதற்கோ ஒன்றுமில்லை

வழக்கெதற்கு வாழும்வரை 

அழவேண்டாமென் மனமே

No comments:

Post a Comment