வாழ்த்துரை
பேரன்புமிக்க பெரியோர்களுக்கு முதற்கண் எனது அன்பான முகமன்னையும் வாழ்த்துக்களையும் மகழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டு இந்த என் வாழ்த்துரையைத் தொடங்குகின்றேன். இன்று மணிவிழாக்காணும் மதிப்புக்கும் ,அன்புக்கும், வணக்கத்துக்குமுரிய விழா நாயகனான ஐயா திரு. சிவ ஶ்ரீ பாஸ்கரக்குருக்களவர்களை வணங்கி என் வாழ்த்துரையைத் துவங்குகிறேன். ஐயா அவர்கள் ஆதிசங்கரரை மானசீக குருவாக ஏற்று பலப்பல இறைபணி,அறப்பணிகளைச் செவ்வன பாரட்டும் வண்ணம் செய்து வருகிறார். அவர் ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த ஆலயமொன்றை எழுப்பக் காரணமாக இருந்தவர். எங்கள் எல்லோரையும் தன் பிள்ளைகளைப்போல அன்பாக வழிநடத்தி வருகிறார். நாங்கள் செய்யும் பணிகளுக்கெல்லாம் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.
…… ……… அவர் இன்னும் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மேலும் மேலும்
பல தொண்டுகள் புரிய என் வாழ்த்துக்களையும் என் வணக்கத்தையும் கூறிக்கொண்டு அமர்கிறேன்.
இவ்வண்ணம் அடியேன்
சிவசங்கர் கணேசன் ( இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன இசையமைப்பாளர், பாடகர்)
No comments:
Post a Comment