கிரிதர கோபாலா கேசவா…..
பல்லவி
கிரிதர கோபாலா கேசவா
அரி நாராயணா உன் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
பரியேரும் பெருமாளே பார்த்தசாரதியே
சரி நிகர் சமானமில்லாத பரம்பொருளே
சரணம்
கரிக்கும் காரிகைக்குமபயமளித்தவனே
விரிகமலம் தனையேந்தும் தாமரைநாபனே
புரிசங்கம் பொன்னாழியேந்தும் மாதவனே
பரிவுடன் எனக்கருள வேண்டுமென வேண்டி
No comments:
Post a Comment