பற்றினேனுன்…..
பல்லவி
பற்றினேனுன் திருவடி உற்றதுணை நீயெனவே
கற்றறிந்தோர் போற்றும் உத்தமனே கேசவா
அனுபல்லவி
உற்றுழி தீர்வார் உறவினை நம்பியே
சுற்றித் திரிந்தேன் தவறெனத்தெளிந்தபின்
சரணம்
முற்றும் துறந்த முனிவர்களும் ஞானியரும்
போற்றித் துதித்திடும் வைகுண்ட வாசனே
எற்றிசையும் புகழ் விளங்கும் நாராயணனே
குற்றம் குறை ஏதுமிலா கோவிந்தா மாதவா
No comments:
Post a Comment