தாமதமேனம்மா….
பல்லவி
தாமதமேனம்மா எனையாள இன்னமும்
இமவான் மகளே உமா மகேச்வரியே
அனுபல்லவி
ஆமருவியப்பன் கேசவன் சோதரியே
மாமறைகள் போற்றும் தாமரைக் கரத்தாளே
சரணம்
நாமங்களாயிரம் உடைய நாராயணியே
காமனுக்கருளிய காமேச்வரியே
பூமண்டலம் போற்றும் லலிதாம்பிகை நீயே
தூமலர் தூவியுன் மலர்ப் பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment