பை விரியும் வரி அரவில்* படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்*
மை விரியும் மணி வரைபோல்* மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்* திரு வடிவைச் சிந்தித்தேற்கு* என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்* என் அன்புதானே*.
திருமங்கையாழ்வார்திருவடிகளேசரணம்
ஶ்ரீசாரநாதன்பெருமாள்திருவடிகளேசரணம்🙏🙏🙏
O Lord reclining in the deep ocean on a called serpent bed! O Dark hued gem! O wonder-Lord! Amid bee-humming lakes with blue waterlilies, the Lord resides in Tiruccherai. Those who contemplate him and serve him, are my masters, for whom my heart overflows with love.
அடியார்கடியேனாய்…..
பல்லவி
அடியார்க்கடியேனாயானேன் நானே
செடியாய வல்வினை போக்கும் தூயோனே
அனுபல்லவி
வடிவான சோதியே வானவர் கோனே
முடிவும் முதலுமிலா சாரநாதப் பெருமாளே
சரணம்
அரவணையில் கடல் நடுவே துயிலும் கேசவனே
தரமான நீலமணி நிறத்தோனே மாயவனே
திருச்சேறை தனில் கிடக்கும் திருமாலே
பரம பத நாதனே உன்னைத் துதிக்கும்
No comments:
Post a Comment