பார்த்தேன்!பரவசித்தேன்! பாடல் புனைந்தேன்!!
கண்டதும்…..
பல்லவி
கண்டதும் ஆனந்தமடைந்தேன் ஶ்ரீராமா
அண்டசாராச்சரங்களனைத்தையுமாள்பவனே
அனுபல்லவி
சண்டையிட்டு தசமுகனை கொன்றழித்த ரகுராமா
உண்டுலகுமிழ்ந்த கேசவனும் நீயே
சரணம்
மண் மகள் ஜானகியின் மனங்கவர்ந்தவனே
தண்மதியைப் பழிக்குமழகு முகத்தோனே
விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்தும் ராகவனே
பண்ணிசைத்துப் பாடல் பல
புனைந்திட எனக்கருள்வாய் 🙏
No comments:
Post a Comment