கோவிந்தன் நாமம்…..
பல்லவி
கோவிந்தன் நாமம் கேட்கப் பேரின்பம்
கோவிந்த சப்தம் தரும் பரமானந்தம்
அனுபல்லவி
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரியும்
கோவிந்தன் கேசவனைக் கண்டாலுமானந்தம்
சரணம்
கோவிந்தன் கண்ணனே அரக்கரை அழித்தவன்
கோவிந்தனே கோபாலன் இடைக்குலத்துதித்தவன்
கோவிந்தனே கோபியர் மனங்கவர்ந்த ஶ்ரீக்ருஷ்ணன்
கோவிந்தனே உலகமனைத்தையும் படைத்தவன்
கோவிந்தன் மட்டுமே உலகுண்டவாயன்
கோவர்த்தனமேந்திக் குவலயம் காத்தவன்
காளிங்கன் தலைமீது களிநடம் புரிந்தவன்
கோவிந்தனே ஶ்ரீமன் நாராயணனுமாவான்
கோவிந்தனே அன்னை தேவகி மைந்தன்
கோவிந்தனே அந்த நந்த குமாரன்
கோவிந்தன் ஒருவனே தேவாதி தேவன்
கோவிந்தனே கடவுள் கோவிந்தனே அனைத்தும்
No comments:
Post a Comment