#நாம_பாரயண_ப்ரீதா.....
நாமம் சொன்னால் நன்மை தருபவள் ....
அவளோட நாமத்த சொன்னா அவ்ளோ புடிக்குமாம் அம்பிகைக்கு.....
அம்பாளோட நாமத்த சொல்றதுக்கு பெருசா படிக்கனும் கத்துக்கனும்னு ஒன்னுமேயில்ல. ஏதாவது ஒரு நாமத்த ஸ்ரத்தையோட மனசுல அம்பா மேல பக்தியோட சொல்லிட்டே இருந்தா போதும். நாமம்ங்கறது சஹஸ்ரநாமம்னு மட்டுமில்ல ஏதாவது ஒரு கோயில்ல இருக்க அம்பாளோட நாமமா இருந்தா கூட போதும்.
நம்ம மனசுக்கு புடிச்ச அம்பிகையோட ரூபத்த நெனச்சிட்டு அவளோட நாமத்த மனசுக்குள்ள சொல்லிட்டு இருந்தாலே போதும். நேரம் காலம் இடம்னு ஏதும் யோசிக்க தேவையில்ல. எல்லா நேரங்கள்ளயும் மனசுக்குள்ள அவள நெனச்சு ஏதாது ஒரு நாமத்த சொல்லிட்டே இருந்தா அம்பா அவளையே கொடுத்துடுவாளாம்.
அப்றோ நாமத்த சொன்னா அவ கேப்பாளா அப்டீங்கற சந்தேகமே வேண்டாம். அவ தலைய சாச்சிட்டு நீங்க சொல்ற எல்லாத்தையும் காதுல கேட்டுட்டே தான் இருக்கா 💚
படித்ததில் பிடித்தது.....
வினயமுடன் வேண்டியவள்…….
பல்லவி
வினயமுடன் வேண்டியவள் பதம் பணிந்தேன்
கனக சிம்மாசனத்தில் வீற்றிருக்குமன்னையை
அனுபல்லவி
தனக்கொரு நிகரில்லா தனிப்பெருந்தேவி
அனங்கனுக்கருளிய கேசவன் சோதரி
சரணம்
தனக்குப் பிடித்த தாயளின் உருவத்தை
மனத்துளிருத்தி பக்தியுடன் துதித்து
தினமவள் நாமம் சொன்னாலே போதும்
அனைத்து நலனுமருள்வாளம்பிகை
No comments:
Post a Comment