வித விதமாக…..
பல்லவி
வித விதமாக புதுப்பாடல் புனைந்திட
உதவிடுவாயெனக்கு கேசவனே ஶ்ரீராமா
அனுபல்லவி
நிதம் நிதமுனைப் போற்றி உன்னருள் வேண்டியுன்
பதம் பணிந்து கொண்டாடி பரவசமடையும் வண்ணம்
சரணம்
பதங்களை அழகுடனே செவ்வனே சேர்த்து
எதுகை மோனையுடன் இலக்கிய இலக்கணமும்
புதுவிதமாக சிறப்படனே அமைத்து
மதுரத்தமிழ் மொழியில் புகழாரம் சூட்டி
No comments:
Post a Comment