புத்தம் புதுப் பாடல்பல…..
பல்லவி
புத்தம் புதுப் பாடல்பல நித்தம் நானெழுத
சித்தம் எனக்கருள்வாய் கேசவனே ஶ்ரீராமா
அனுபல்லவி
வித்தகரும் போற்றும் வண்ணம் எதுகை மோனையுடன்
தத்துவப் பொருள் நிறைந்த இலக்கிய நயத்தோடு
சரணம்
முத்தமிழில் எதுகை மோனையுடன் சேர்ந்து
தித்திக்கும் கவிநயமும் உவமைகளும் கலந்து
அத்தனை பேரும் வியந்து பாராட்டும் வண்ணம்
உத்தமனே உனது பெருமைகளைக் கூறும்
No comments:
Post a Comment