Friday, 18 August 2023

ஶ்ரீலக்ஷ்மிவராகனை……

 

             ஶ்ரீலக்ஷ்மிவராகனை……


                பல்லவி

     ஶ்ரீலக்ஷ்மிவராகனை த்துதித்தேன்

     ஶ்ரீலக்ஷ்மியுடனிருக்கும் திருமாலைக் கேசவனை

               அனுபல்லவி     

     நீலமேக சாமளனை ஆலிலையில் துயில்பவனை

     நீலகண்டன் நேசனை நீளா பூதேவி போற்றும்

                 சரணம்

     ஆலகாலமுள்ள அனந்தனும் கருடனும்

     பூலோக மாந்தரும் வேதங்களும் கொண்டாடும்

     கோலாகலமானவனை கோபர்கள் நேசனை

     மாலனை மதுசூதனனை உலகுண்ட வாயனை


     சீலமுடன் பிரமனும் சுக சனகாதியரும்

     மேலுலகோரனைவரும் வணங்கிடும் நாராயணனை          

     சாலச்சிறந்த தாமிர பரணி தீரத்தில்

     கோலமுடனெழுந்தருளிக் காட்சி தரும்     


पल्लवि

श्री लक्ष्मी वराहं भजे-अहं
श्री लक्ष्मी सहितं श्रित जन शुभ प्रदम्

अनुपल्लवि
नील मेघ जय श्यामळ गात्रं
नीला भू-देवी स्तुति पात्रं
नील कण्ठ शिव गुरु गुह मित्रं
निखिल भक्त जन भय-आर्ति दात्रम्

चरणम्
मङ्गळ-आलय-आभोगि नुत पदं
पुङ्गव बुध जन नतं वेद नुतं
शङ्कर प्रिय-करं कुबेर प्रतिष्ठितं
शङ्ख चक्र धरं कृपा-करम्
पङ्कज-आसन प्रमुख सेवितं
पङ्कज मुख भार्गवी भावितं
भङ्ग हर ताम्रपर्णी तीरस्थं
सङ्कट हर सदा-आनन्द सहितम्

No comments:

Post a Comment