பார்த்தேன்!பரவசித்தேன்!பாடல் புனைந்தேன்!
பிட்டுக்கு மண் சுமந்து…..
பல்லவி
பிட்டுக்குமண் சுமந்து பிரம்படி பட்டவனை
எட்டுதிக்கும் புகழ் விளங்கும் சிவனைப் பணிந்தேன்
அனுபல்லவி
எட்டெழுத்தான் கேசவன் நேசனை ஈசனை
வட்ட நிலவின் பிறைசூடிய சேகரனை
சரணம்
துட்ட அரக்கன் திரிபுரனை எரித்தவனை
அட்ட வீரட்ட தலங்களிலுறைபவனை
சட்ட நாதனைக் கட்டழகு மேனியனை
மட்டவிழ் மலர் தூவி மனமாரத்துதித்து
No comments:
Post a Comment