நீயே என்னைக்கைவிட்டால்…..
பல்லவி
நீயே என்னை க்கைவிட்டால்
வேறெங்கு செல்வேன் எவரிடம் முறையிடுவேன்
அனுபல்லவி
தாயே தயாபரியே தேவி காமாக்ஷியே
மாயே மரகதமே மகிடனை மாய்த்தவளே
சரணம்
ஓயாதுன் பதமே அனுதினம் துதித்தேன்
காயாம்பூ வண்ணன் கேசவன் சோதரியே
பேயேனெனக்குமுன் கடைக்கண்ணருள்வாயே
தேயாத புகழ் மேவும் காஞ்சிபுரநாயகியே
No comments:
Post a Comment