மாமாங்கப் பிள்ளையாரின்…..
பல்லவி
மாமாங்கப் பிள்ளையாரின் மலர்ப் பதம் பணிந்தேன்
தேமதுரத் தமிழில் பாமாலை புனைந்து
அனுபல்லவி
ஆமருவியப்பன் கேசவன் மருகன்
ஓமெனும் மந்திரத்தினுட்பொருளனவன்
சரணம்
சாம முதல் வேதங்களனைத்தும் போற்றும்
தாமரைப் பாதன் தடைகளை உடைப்பவன்
மாமலராள் நோக்குடைய ஆனைமுகத்தோன்
தூமலர் தூவித்துதிப்பவர்க்கருள்பவன்
No comments:
Post a Comment