எத்தனையோ பாடல்கள்..…..
பல்லவி
எத்தனையோ பாடல்கள் உனைப்போற்றிப் பாடிவிட்டேன்
சித்தமின்னுமிரங்காததேனோ ஶ்ரீ ராமா
அனுபல்லவி
உத்தமனே கேசவனே உனயன்றி வேறு தெய்வம்
இத்தரையில் எனக்கில்லை பலமுறை நான் சொல்லிவிட்டேன்
சரணம்
மெத்தனமாய் இரு என்று யாருனக்கு எடுத்துரைத்தார்
உத்தமி ஜானகியோ பெத்தவள் கோசலையோ
மத்தவர் சொல் பேச்சைக் கேட்பவன் நீயல்லவே
குத்தம் செய்ததென்ன சொன்னால் நான் திருந்துகிறேன்
No comments:
Post a Comment