ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 82 ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 52
கபஸ்தி நேமிஸ் ஸத்வஸ்தஸ் ஸிம்ஹோ பூத மஹேஸ்வர:
ஆதி தேவோ மஹாதேவோ தேவேஸோ தேவப்ருத் குரு:
487. கபஸ்தி நேமி: விளங்குகின்ற சக்கராயுதம் உடையவன்.
488. ஸத்வஸ்த: அடியவர் நெஞ்சில் குடியிருப்பவன்.
489. ஸிஹ்ம: தண்டிப்பவன்.
490. பூதமஹேச்வர: எல்லா உயிரினங்களுக்கும் மேலானவன்.
491. ஆதிதேவ: ஆதிப்பிரான்.
492. மஹாதேவ: விளையாட்டாக எதனையும் செய்யும் மகாதேவன்.
493. தேவேச: தேவர்களுக்கு ஈசன்.
494. தேவப்ருத்: தேவர்களைத் தாங்குபவன்.
495. குரு: தேவர்களின் ஆசாரியன்.
गभस्तिनेमिः सत्त्वस्थः सिंहो भूतमहेश्वरः ।
आदिदेवो महादेवो देवेशो देवभृद्गुरुः
பல பெயருடைய…..
பல்லவி
பல பெயருடைய கேசவன் புகழ் பாடி
அவனருளாலே அவன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
உலகோர் போற்றும் உத்தமன் கோவிந்தன்
அலைகடல் நடுவே துயிலும் நாராயணன்
சரணம்
அடியவர் நெஞ்சில் குடியிருக்குமச்சுதன்
கொடியோரை தண்டிக்கும் நெடுமாலவனே
படையென சக்கரமேந்திடும் சுதர்சனன்
ஊயிரினமனைத்துக்குமுயர்வானவனே
வேதியோரோதும் வேதப்பொருளவன்
ஆதிபிரானவன் மாதேவன்
ஆதி தேவன் தேவரைக் காப்பவன்
மேதினி போற்றும் குருவுமவனே
No comments:
Post a Comment