அம்பாடிக்கண்ணன்
பல்லவி
அம்பாடிக்கண்ணனை குருவாயுரப்பனை
அம்பலத்தில் கண்டு மனமாரத்துதிதேன்
அனுபல்லவி
அம்புலிமுகத்தினனை ஆதவனொளி யுடையானை
செம்பவள வாயும் முத்துபல்லழகும் திகழ்
சரணம்
கம்சனை வதம் செய்த மாயனைக்கேசவனை
நம்புமடியார்க்கு இன்பமளிப்பவனை
தும்புரு நாரதர் தினம்துதிக்கும் நாரணனை
வெம்பவக்கடலினைக்கடந்திட எனக்குதவும்
No comments:
Post a Comment