நாராயணி
பல்லவி
சர்வமங்களம் தந்தருளும் தேவி
சரணடைந்தேனுனை கௌரி நாராயணி
அனுபல்லவி
பர்வதவர்த்தினி பரமதயாகரி
துர்கே சரணம் நற்கதியருள்வாய்
சரணம்
கர்மவினைகளால் கட்டுண்ட அனைவரையும்
வர்மமின்றிக் காத்தருளும் கருணாகரி
தர்மசம்வர்த்தினி திரிபுரசுந்தரி
சர்வமும் நீயே தயை புரிவாயே
No comments:
Post a Comment