ஹேரம்ப கணபதி
பல்லவி
ஹேரம்ப கணபதியின் மலர்ப் பதம் பணிந்தேன்
அஞ்சு முகம் கொண்ட ஆனைமுகத்தோன்
அனுபல்லவி
ஈரைந்து கரங்களில் பரசும் பாசாங்குசமும்
ஆரமும் மோதகமும் தந்தமுமேந்திய
சரணம்
சூரியனை மிஞ்சும் காந்தியுடையவன்
மாறனும் நாணுறும் பேறெழில் வடிவினன்
பாரெங்கும் புகழ் விளங்கும் கேசவன் மருகன்
வாரணமுகத்தோன் வருமிடர் களைபவன்
No comments:
Post a Comment