வாமனன்
பல்லவி
வாமனனைக்கேசவனை உலகளந்த பெருமாளை
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரப்பணிந்தேன்
அனுபல்லவி
மாமலராள் திருமகளைத்தன் மார்பில் வைத்திருக்கும்
தாமரை ப்பதத்தானை ஆமருவியப்பனை
சரணம்
பாமரரும் பண்டிதரும் சாமமுதல் வேதங்களும்
காமனும் கருடனுமனந்தனும் துதித்திடும்
தாமரையாள்கேள்வனை ஸ்ரீவாசுதேவனை
நாமமாயிரமுடைய நாராயணனை
No comments:
Post a Comment