குரு தத்தாத்திரேயன்
பல்லவி
அத்ரி குமாரனை தத்தாத்ரேயனை
சித்திரத்தில் கண்டு மனமாரத்துதிதேன்
மூவருமான முழுமுதற்கடவுளை
துரிதம்
மூவிரு கரங்களில் மாலை கமண்டலம்
சங்கு சக்கரம் உடுக்கை ஈட்டி
ஏந்தியே காட்சியளித்திடும் நேயனை
அனுபல்லவி
பத்ரி நாராயணன் கேசவன் நேசனை
தத்துவப்பொருளான சச்சிதானந்தனை
சரணம்
சித்தரும் முனிவரும் யோகியரும் ஞானியரும்
சித்தத்தில் வைத்து என்றென்றும் வணங்கிடும்
எத்திசையும் புகழ் விளங்கும் உத்தமனை
வித்தகர் போற்றும் ஞானகுருவை
No comments:
Post a Comment