தேவமனோகரி இராகம்: தேவமனோகரி
தாளம் : ஆதி
பல்லவி
தேவமனோகரியின் பொற்பாதம் பணிந்தேன்
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிந்திடும்
அனுபல்லவி
பூவையர் கலைமகள் அலைமகள் வணங்கிடும்
தேவிஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி
சரணம்
தேவாதிதேவன் கேசவன் சோதரி
மாவிடைவாகனன் மனங்கவர் நாயகி
மூவாசைப்பினிபோக்கும் முன்வினைப்பயன் நீக்கும்
மூவுலகும் போற்றும் அன்னை பராசக்தி
No comments:
Post a Comment