ஐங்கரன்
பல்லவி
வண்ணமய மாலைகளணிந்திருக்கும் கணபதியை
கண்ணாரக் கண்டு மனதாரத்துதித்தேன்
அனுபல்லவி
புண்ணியம் செய்தோர்க்கு நற்கதியளித்திடும்
தும்பிமுகத்தோனைக் கேசவன் மருகனை
சரணம்
தண்மதி கலைதனை சூடிய கரிமுகனை
எண்ணித்துதித்திடும் பக்தருக்கருளும்
அண்ணலை ஐங்கரனை ஆனைமுகத்தோனை
பண்ணிசை ரசித்திடும் விக்னவினாயகனை
No comments:
Post a Comment