உன்னிக்கண்ணன்
பல்லவி
உன்னிக்கண்ணனை உளமாரத்துதித்தேன்
மன்னுபுகழ் கோகுலத்து மண்ணில் விளையாடிய
அனுபல்லவி
சின்னப்பதம் வைத்து சிங்கார நடைநடந்த
கன்னலை த்தேனை கருநீலவண்ணனை
சரணம்
புன்சிரிப்பும் இன்முகமும் பூந்தளிர் மேனியும்
பொன்முத்துமாலையும் மயில்பீலிக்கொண்டையும்
மின்னுகின்ற கண்ணொளியும் கையில் சிறுகுழலும்
தன்னிடத்தே கொண்டு லீலைகள் புரிந்திடும்
No comments:
Post a Comment