Saturday, 25 January 2014

கரிமுகன்




கரிமுகன்
                           
           பல்லவி

 கணபதி உனதிரு கழல் பணிந்தேன்
 வணங்கிடுமெனக்குன் அருளளித்திடுவாய்

          அனுபல்லவி

 பிணங்கிடும் வள்ளி முருகனை மணந்திட
 துணைபுரிந்தவனே தும்பிமுகத்தோனே

           சரணம்

பணம் புகழ் பதவி எதுவும் வேண்டேனுன்
இணையடி நிழலில் இடம் தந்திடுவாய்
கணங்களின் தலைவனே கேசவன் மருகனே
கணமுமுனை மறவா மனமொன்றே போதும்










No comments:

Post a Comment