எளிய கணபதி
பல்லவி
எளிய கடவுளே விக்னவினாயகா
களிப்புடன் அரச மரத்தடியே வீற்றிருக்கும்
அனுபல்லவி
ஒளிமயமானவனே ஓங்காரவடிவினனே
நளின நாபன் கேசவன் மருகனே
சரணம்
அளித்திடும் எளிய எருக்கமாலையும்
துளிர் வெற்றிலையும் பாக்கும் பழமும்
தெளிதேனுமேற்று அடியார்க்கருளும்
களிறுனைப் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
No comments:
Post a Comment