Monday, 27 January 2014

குமரன்


     குமரன்

           பல்லவி

குன்றுதோராடும் குமரனைத் துதித்தேன்
வென்று சூரனின் கதை முடித்த வேலனை

           அனுபல்லவி

அன்றும் இன்றும் அடியார்க்கருளவே
சென்று செந்தூரில் நின்ற முருகனை

            சரணம்

ஒன்றும் பலவுமாய் ஓங்கார வடிவாகி
என்றும் காட்சிதரும் கேசவன் மருகனை
தொன்றுதொட்டு உலகனைத்தும் கொண்டாடும் சரவணனை
மன்றாடிப்பதம் பணிந்து எனையாள வேண்டுமென

No comments:

Post a Comment