பவனபுரக்கண்ணன்
பல்லவி
உனதருளே போதும் குருவாயுரப்பா
எனதுமனக்குறைகளனைத்தும் நீங்கிட
அனுபல்லவி
சனகாதி முனிவரும் தேவரும் பிரமனும்
குருநாரதரும் அருகிருந்து போற்றும்
சரணம்
வனமாலை துளபம் கௌத்துபமணிந்த
அனந்தனே கேசவா அருமாகடலமுதே
தினமுனைத்துதித்தேன் தீனசரண்யனே
கனிவுடன் காத்தருள் பவனபுரத்தரசே
No comments:
Post a Comment