பொன்னார் மேனியன்
பல்லவி
பொன்னிற மேனியனை நமச்சிவாயனை
என்னிரு கண்குளிரக் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
செந்நிறக்கண்ணன் கேசவன் நேசனை
தன்னடியார்களுக்கின்னருள் தந்திடும்
சரணம்
இன்னிசை நாடகக்கலைகளை ரசித்திடும்
மன்னுபகழ் மாமதுரை சொக்கநாதனை
பன்னகாபரணனை பரமேச்வரனை
தன்னிகரில்லாத தேவாதி தேவனை
No comments:
Post a Comment