யசோதை பாலன்
பல்லவி
புண்ணியம் என்ன செய்தாய் தாயே யசோதா
கண்ணனின் கன்னத்தில் முத்தமிட நீயும்
அனுபல்லவி
எண்ணிலா முனிவரும் தேவரும் இந்திரனும்
எண்ணி எண்ணி மனத்தினில் பொறாமை கொள்ளவும்
சரணம்
மண்ணையுண்ட கேசவனை மிரட்டிய போதவன்
கண்ணையுருட்டி வாய் திறந்து காட்டிட
அண்டசராசரங்களனைத்துமதில் தோன்ற
கண்ணிமைக்காமலே அதை நீ காணவே
No comments:
Post a Comment