சுந்தர கணபதி
பல்லவி
கண்டதும் களிப்படைய ச்செய்திடும் கணபதியே
தண்டனிட்டு பணிந்தேன் தயை புரிவாயே
அனுபல்லவி
அண்டசராசரங்களனைத்தையும் காப்பவனே
தண்டபாணியின் சோதரனே ஐங்கரனே
சரணம்
சுண்டெலியை வாகனமாய்க்கொண்ட கரிமுகனே
பண்டரிநாதன் கேசவன் மருகனே
திண்டாடித் திரிந்து திசைகெட்டலைந்த என்னை
கண் பார்த்துக் காத்தருள வேண்டுமெனத் துதித்தேன்
No comments:
Post a Comment