சயன கணபதி
பல்லவி
சயனித்திருக்கும் கணபதியைத்துதித்தேன்
தயவளித்தெனையே காத்தருள வேண்டுமென
அனுபல்லவி
செயல்களை த்துவங்கும் முன் அவன் பதம் பணிவோர்க்கு
செயமளித்திடும் ஸ்ரீ விக்ன விநாயகனை
சரணம்
அயனரி அரன்பணி ஆனைமுகத்தோனை
வியந்து நான்மறை புகழ்ந்திடும் கரிமுகனை
நயமுடன் நந்தியும் கணங்களும் தேவரும்
பயமுடன் அரக்கரும் கரம் பணிந்தேத்தும்
மயர்வறமதியுடை கேசவன் மருகனை
உயர்நிலத்திந்திரன் தேவர்கள் போற்றும்
புயங்கன் மகனை குகசோதரனை
மயக்கும் மதமுடை வாரணமுகனை
No comments:
Post a Comment