ஆனைமுகன்
பல்லவி
அனைத்துமானவனை ஆனைமுகத்தோனை
எனைக்காத்தருள வேண்டுமெனத்துதித்தேன்
துரிதம்
மூவரும் முனிவரும் நந்தியும் கணங்களும்
தேவரும் யாவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
சுனை நீராய்க்கருணையளித்திடுமைங்கரனை
வனமாலையணிந்த கேசவன் மருகனை
சரணம்
முனைப்புடனவன் நாமமுரைத்திடும் அடியவர்க்கு
அனைத்து நலன்களுமளித்திடும் கணபதியை
நினைத்து நெஞ்சிலிருத்தித்துதிப்பவர்க்கு
வினையிடர் களைந்திடும் வேழமுகத்தோனை
No comments:
Post a Comment