தக்ஷிண மூகாம்பிகை
பல்லவி
மூகாம்பிகையின் பதமலர் பணிந்தேன்
யோகமாயையாயகிலம் காக்கும்
அனுபல்லவி
நாகநாதனும் கேசவனும் கணபதியும்
நாகயக்ஷியும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
சாகசம் புரிந்து சரச்வதியாய்த் தோன்றி
சோகம் நீக்கி சுகமளிப் பவளின்
ஆகம வேத புராணங்கள் போற்றும்
நாகவல்லியின் பணச்சிக்காடு
No comments:
Post a Comment