மத்தளவயிற்றினன்
பல்லவி
மத்தள வயிற்றினனே மகாகணபதியே
சித்தத்திலிருத்தி யுனை அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
எத்தனை முறையுன்னைக்கண்டாலும் சலிக்காத
உத்தமனே உயர் ஓங்காரவடிவினனே
சரணம்
மத்தமும் மதியமும் வைத்திருக்கும் கரிமுகனே
பித்தனின் மகனே கேசவன் மருகனே
வித்தகர் புத்தியில் வீற்றிருப்பவனே
நித்தமும் பணிந்திடும் எனக்கருள வேண்டுமென

No comments:
Post a Comment