அரசமரத்தடி விநாயகன்
பல்லவி
அரசமரத்தடியே அமர்ந்திருக்கும் கணபதியை
வாரணமுகனை மனமாரத்துதித்தேன்
துரிதம்
அரனயனரியும் நந்தியும் கணங்களும்
நரர்சுரர் முனிவரும் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
வரம்தரும் கரமும் அபயகரமும் காட்டி
எளியோர்க்கருளவே எழுந்தருளிக்காட்சிதரும்
சரணம்
சிரந்தனிலிளம்பிறை சூடிடும் கரிமுகனை
சரவணபவகுகனின் இளைய சோதரனை
புரமெரித்த சிவன் மகனை கேசவன் மருகனை
சரணடைந்த அடிமையெனை ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment