குகசோதரன்
பல்லவி
துணைபுரிந்தருள்வாய் கணபதியே
இணையடி பணிந்தேன் உனதருள் வேண்டியே
அனுபல்லவி
பிணங்கிய வள்ளியை முருகன் மணந்திட
துணைபுரிந்தவனே தும்பிமுகத்தோனே
சரணம்
வணங்கித்தொடங்கிடும் கருமங்களனைத்தையும்
குணமுடன் தடையற நடைபெறச்செய்திடும்
கணங்களின் அதிபதியே கேசவன் மருகனே
குண நிதியே குக சோதரனே
No comments:
Post a Comment